

உலகப் பொருளாதாரமும் தொழில்நுட்ப சந்தையும் அதிவேகமாக உருமாறி வரும் தற்போதைய சூழலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய ஸ்டார்ட்-அப் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக நம்முடைய டீன்ஏஜ் வயது குழந்தைகள் தங்களின் பள்ளிப் படிப்பு, பொழுதுபோக்குகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் வேளையில், இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், உலகளாவிய வணிக அரங்கையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து அசத்தியுள்ளார்.
உலகின் மிக உயரமான கட்டிடம் மற்றும் துபாயின் பெருமைமிகு அடையாளமான ‘புர்ஜ் கலிஃபா' வளாகத்தில் ‘மெங்கோ இன்ஜின்’ (Mengo Engine) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
வணிகங்கள் தங்கள் சந்தைப்படுத்தலை மேம்படுத்தவும், அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், வளர்ச்சியை எட்டவும் உதவும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு இவரது ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்படுகிறது.