உலக அரங்கில் வலிமைபெறும் இந்தியா

உலக அரங்கில் வலிமைபெறும் இந்தியா
Updated on
3 min read

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்று முடிந்த, 18-வது  பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டறிக்கையான, ‘நியுடெல்லி பிரகடனம்’ (BRICS- New Delhi Declaration 2026), உலக நாடுகளுக்கு சில செய்திகளை வெளிப்படையாகவும், வேறு சிலவற்றைச் சொல்லாமலும் தெரிவிக்கிறது. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உறுப்பினராகவுள்ள 11 நாட்டுத் தலைவர்களும்  கையெழுத்திட்டு, கூட்டாக வெளியிட்டிருக்கும் இந்த கூட்டறிக்கை சொல்லாமல் சொல்வது, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டு நாடுகளுக்கு நாங்கள் அஞ்சவில்லை என்பதுதான்.

எரிசக்​தி, வர்த்​தகம், நிதி, தொழில்​நுட்​பம், செயற்கை நுண்​ணறி​வு, விவ​சா​யம், பரு​வநிலை போன்ற பொருளா​தா​ரம் சார்ந்​தவை மட்​டுமின்​றி, உலக அமை​தி, பாது​காப்​பு, தீவிர​வாதம், தேசங்​களுக்​கான பொது அமைப்​பு​களில் செய்​யப்பட வேண்​டிய சீர்​திருத்​தங்​கள் போன்ற பல அரசி​யல் நிலைப்​பாடு​கள், கோரிக்​கைகள் குறித்து தெளி​வாக​வும், அழுத்​த​மாக​வும் அறிக்கை வெளி​யிட்​டிருப்​பது அதைத்​தான் காட்​டு​கிறது.

தங்கள் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்காக தனியே முயற்சிப்பது தவிர, பல நாடுகள் பல்வேறு விதங்களில் கூட்டு சேர்ந்தும் செயல்பட்டு வருகின்றன. G5, G7, G20, NATO, ASEAN, APEC, SCO போன்றவை அவற்றில் சில.

பிரிக்ஸ்: அந்த வகையில் 2050-ம் ஆண்டு வாக்கில் உலகின் பொருளாதார வளர்ச்சி பிரேசில், ரஷ்யா, இந்தியா. சீனா ஆகிய ‘வளரும் பொருளாதாரங்கள்’ (எமெர்ஜிங் எக்கானமீஸ்) நாடுகளில் இருந்து வரும் என்று பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓனில் குறிப்பிட்டார். இதைக் கவனித்த அந்த நாடுகள் ஒன்று சேர்ந்து 2006-ல் தொடங்கிய பிரிக் (BRIC) அமைப்பு பிற்பாடு தென்னாப்ரிக்காவையும், அதன்பின் மேலும் 6 நாடுகளையும் சேர்த்துக்கொண்டு, பிரிக்ஸ்+ (BRICS+) என்ற பெயரில் இயங்கி வருகிறது. மேற்கத்திய நாடுகள் இல்லாத அமைப்பாக உருவாகி, வளர்ச்சி தேவைப்படும் (குளோபல் சவுத்) நாடுகளின் வலுவான குரலாக மாறியிருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in