தமிழ்நாடு தொழில் துறையில் தாமிரத்தின் முக்கியத்துவம்

தமிழ்நாடு தொழில் துறையில் தாமிரத்தின் முக்கியத்துவம்
Updated on
1 min read

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 11 முதல் 12% பங்களிப்பை வழங்கும் தமிழ்நாடு, நாட்டின் மிகவும் தொழில் துறை முன்னேற்றம் பெற்ற மாநிலங்களில் ஒன்றாகும். இருப்பினும், அதன் தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்பின் சில பகுதிகள் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் சில பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், முழு விநியோக சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தாமிரப் பற்றாக்குறை, தொழில் துறை அமைப்புகள் எடுத்துக்காட்டாகக் கூறும் ஒரு முக்கிய அம்சமாகும்.

அந்த ஆலை வருடத்துக்கு சுமார் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்தது. இது இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 40% ஆகும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் விளைவாக, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் தாமிர கத்தோடுகளை ஏற்றுமதி செய்த முன்னணி 5 நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக மாறியது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in