சூப்பர் மார்க்கெட்டை சுற்றிப் பார்க்கப் போறேன்

சூப்பர் மார்க்கெட்டை சுற்றிப் பார்க்கப் போறேன்
Updated on
2 min read

சுற்றுலா என்​றாலே வரலாற்று நினை​வுச்​சின்​னங்​களும், கடற்​கரைகளும், ஆடம்பர உணவகங்​களும் தானே நினை​வுக்கு வரும்? ஆனால், 2026-ல் இந்​தக் கருத்து முற்​றி​லும் மாறி​யுள்​ளது. இந்​தி​யப் பயணி​களிடையே இப்​போது உரு​வாகி​யிருக்​கும் பிரபல​மான புதிய டிரெண்ட் 'சூப்​பர் மார்க்கெட் சுற்​றுலா' (Grocery Store Tourism).

ஆம், வெளி​நாட்​டுக்​குச் செல்​லும்​போது ஒரு சாதாரண சூப்​பர் மார்க்​கெட்டை சுற்​றிப் பார்ப்​பது இப்​போது ஒரு முழு​மை​யான பயண அனுபவ​மாக மாறி​விட்​டது. சமீபத்​திய டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் வெளி​யிட்ட ஆய்​வு​களின்​படி, 77% இந்​தி​யப் பயணி​கள் இந்த அனுபவத்தை விரும்​பு​கின்​றனர், மேலும் 35% பயணி​கள் தங்​களது அடுத்த பயணத்​தில் கண்​டிப்​பாக தாங்​கள் செல்​லும் ஊரில் உள்ள பிரபல​மான சூப்​பர் மார்க்​கெட்​டைப் பார்க்​கத் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

ஒரு நாட்டை அறிய சிறந்த வழி எது?

ஒரு நாட்டு மக்​கள் என்ன சாப்​பிடு​கிறார்​கள் என்று தெரிந்​தால், அவர்​கள் எப்​படி வாழ்​கிறார்​கள் என்று புரிந்​து​விடும். "இதை அந்​தந்த ஊர் சூப்​பர் மார்க்​கெட் (பல்​பொருள் அங்​காடி) நமக்கு காட்​டி​விடும். ஜப்​பானுக்​குப் போனால், மிசோ சூப் மட்​டும் பல வகை​களில் கிடைக்​கும். கொரி​யா​வில் ராமென் நூடுல்ஸ் வகைகள் வரிசை​யாக அடுக்கி வைக்​கப்​பட்​டிருக்​கும்.

பிரான்​ஸில் நூறுக்​கும் மேற்​பட்ட சீஸ் வகைகள் இருக்​கும். இந்​தக் கடை அலமாரி​களை பார்த்​தாலே போதும் — அந்த நாட்டு மக்​கள் எப்​படிப்​பட்​ட​வர்​கள், எதை விரும்​பு​கிறார்​கள், எப்​படி வாழ்​கிறார்​கள் என்று தெரிந்​து​விடும்.

இன்​றைய இந்​தி​யப் பயணி​கள் பல்​பொருள் அங்​காடிகளை வெறும் கடை என்று நினைக்​காமல், மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யைச் சொல்​லும் ஒரு `வாழ்க்கை முறை அருங்​காட்​சி​யக​மாக' பார்க்​கிறார்​கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in