

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புவிசார் அரசியல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒன்றரை ஆண்டாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளை அதிக அளவில் விற்று வந்தனர். 2026-ம் ஆண்டில் இதுவரையில் எப்ஐஐ-கள் ரூ.3.47 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்று நிகர விற்பனையாளர்களாக உள்ளனர்.
அதேநேரம், இதே காலகட்டத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ) ரூ.4.60 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கி நிகர வாங்குபவர்களாக உள்ளனர். இந்நிலையில், இந்தப் போக்குக்கு மாறாக, கடந்த வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாகவும் உள்நாட்டு நிறுவனங்கள் லாபப் பதிவு செய்து நிகர விற்பனையாளர்களாகவும் மாறினர்.