வரிசை கட்டும் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனங்கள்

வரிசை கட்டும் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனங்கள்
Updated on
2 min read

பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் நாம் கவலைப்படுகிறோம். இந்தத் தொல்லைக்கு ஒரு நடைமுறைத் தீர்வாக 'ஃப்ளெக்ஸ்-ஃபியூல்' (Flex-Fuel) தொழில்நுட்பம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. 2026-ல் இந்தத் தொழில்நுட்பம் நாடு முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியமான மாற்றமாக உருவெடுத்துள்ளது.

ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனம் (Flex Fuel Vehicle) என்பது பெட்ரோல் மட்டுமின்றி, எத்தனால் அல்லது இவ்விரண்டின் கலவையிலும் இயங்கும் திறன் கொண்ட ஒரு வாகனம். இதன் முக்கிய சிறப்பியல்பு, எரிபொருளில் எத்தனால் எவ்வளவு கலந்துள்ளது என்பதை எரிபொருள் உணரி தானாகவே கண்டறிந்து, அந்தத் தகவலை இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பும்.

இந்தத் தகவலுக்கேற்ப, இன்ஜினின் செயல்பாட்டை தானாகவே மாற்றியமைக்கும் திறன் இவ்வாகனங்களுக்கு உண்டு. எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் போன்ற விவசாயப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு உயிரி எரிபொருள்.

தற்போது இந்தியாவில் E20 தரநிலை (20% எத்தனால், 80% பெட்ரோல் கலவை) நடைமுறையில் உள்ளது. எனினும், ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனங்கள் இதைவிட அதிக எத்தனால் விகிதம் கொண்ட E85 (85% எத்தனால்) மற்றும் சில சந்தர்ப்பங்களில் E100 (100% எத்தனால்) ஆகிய எரிபொருள் வகைகளிலும் திறம்பட இயங்கும் திறன் கொண்டவை.

கிடைக்கும் தன்மையும் விலை நன்மையும்

இந்திய அரசு எத்தனால் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் E20 எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5,000 E100 எரிபொருள் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

விலை நன்மைகள்:

குறைந்த எரிபொருள் விலை: பெட்ரோலைவிட எத்தனால் விலை கணிசமாகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, டெல்லியில் E85 எரிபொருளின் விலை லிட்டருக்கு ₹82 ஆகவும், E20 பெட்ரோல் விலை ₹102 ஆகவும் உள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in