

இந்தியப் பங்குச் சந்தையில் முதல்நிலை பங்கு வெளியீடு (ஐபிஓ) நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 10 முதல் தொடங்கும் இந்த வாரத்தில் மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ் (ரூ.940 கோடி), தூத் டிரான்ஸ்மிஷன் (ரூ.3,067 கோடி), மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் (ரூ.1,553 கோடி), ஷிப்ராக்கெட் (ரூ.1,617 கோடி) மற்றும் பெஹாரி லால் இன்ஜினியரிங் (ரூ.302 கோடி) ஆகிய 5 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட உள்ளன.
மேலும், ஏற்கெனவே தொடங்கி உள்ள 2 ஐபிஓ-க்களுக்கான சந்தா ஆகஸ்ட் 11 அன்று நிறைவடைகிறது. இதனிடையே, ஆர்டீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 12-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
சந்தையில் நிலவும் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான ஆர்வம் காரணமாக, முதன்மைப் பங்குச்சந்தை வர்த்தகம் வரும் வாரத்திலும் மிக வலுவாக இருக்கும் என மோதிலால் ஓஸ்வால் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் சித்தார்த்த கெம்கா தெரிவித்துள்ளார்.