

ஓய்வூதியப் பலன்கள் அல்லது சொத்து விற்பனை அல்லது போனஸ் மூலம் கணிசமான ஒரு தொகை கிடைக்கும்போது, அதனை வங்கிகளில் ‘நிலையான வைப்பு நிதி’ (எஃப்.டி.) கணக்கில் பாதுகாப்பாக முதலீடு செய்வதுதான் பலரது வழக்கம்.
ஆனால், இவ்வாறு மொத்தத் தொகையையும் ஒரே எஃப்.டி-யாக முதலீடு செய்வது சரியா? அல்லது இதில் மாற்று வழிகள் ஏதேனும் உள்ளதா? என்பதை இங்கு பார்ப்போம். விவேக், சமீர் ஆகிய இருவரும் நண்பர்கள்.