

அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளி நிறுவனத்தின் (ஜிஎம் இண்டர்நேஷனல் ஹுஜஸ் நெட்வொர்க் சிஸ்டம்) செயல் துணைத் தலைவர் ரமேஷ் ராமசுவாமி. இந்நிறுவனத்தில் அவர் 35 வருடங்களாக பணியாற்றுகிறார்.
தமிழரான இவர், டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ‘இந்தியா ஸ்பேஸ் காங்கிரஸ் 2026’ விண்வெளி ஆய்வு மாநாட்டின் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு இடையே, விண்வெளி ஆய்வு தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு ரமேஷ் ராமசுவாமி அளித்த சிறப்பு நேர்காணல்:
வானிலை கணிப்பு, ஜிபிஎஸ், செயற்கைக்கோள் போன்றவற்றில் விண்வெளி ஆராய்ச்சி சாதாரண மக்களின் வாழ்க்கையில் எப்படி உதவுகிறது?
மின்சாரம், தண்ணீரைப் போலவே, கண்ணுக் குப் புலப்படாத பயன்பாட்டுச் சேவையாக உருவான செயற்கைக்கோள் தொழில்நுட்பம் விண்வெளி ஆய்வின் முக்கியப் பயன் ஆகும். புயல், வெள்ளம் காரணமாக தரைவழி நெட்வொர்க்குகள் சீர்குலைந்தால், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க செயற்கைக்கோள் இணைப்பு கள்தான் ஒரே வழியாகும்.
ஸ்மார்ட்போன், ஏடிஎம் போன்றவை முதல், விமானத்தில் வைஃபை மற்றும் கடல்வழி வழிசெலுத்தலைச் சாத்தியமாக்குவது வரை இந்த விண்வெளித் தொழில்நுட்பம் பொருளாதாரத்தை இயங்க வைப்பது எனப் பட்டியல் நீள்கிறது.
அரசு நிர்வாகத்தின் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதித்ததன் நோக்கம் என்ன?
வரும் 2033-க்குள் இந்தியாவை 44 பில்லியன் டாலர் (ரூ.4.1 லட்சம் கோடி) விண்வெளிப் பொருளாதாரமாக மாற்றுவதே இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்தின் இலக்கு. இது இப்போது உலகளாவிய விண்வெளிச் சந்தையில் 2% ஆக உள்ள இந்திய பங்கை சுமார் 8% ஆக அதிகரிக்கும். இஸ்ரோ போன்ற அரசு
நிறுவனங்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகின்றன.
ஆனால், உற்பத்தியை விரிவுபடுத்தவும், செலவுத் திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்பங் களை வெகுஜனப் பயன்பாட்டுக்காக வணிகமய மாக்கவும் தனியார் நிறுவனங்கள் தேவைப் படுகின்றன.