பெட்ரோலில் எத்தனால் கலப்பு: மைலேஜ் குறையுமா? இன்ஜினை பாதிக்குமா?

பெட்ரோலில் எத்தனால் கலப்பு: மைலேஜ் குறையுமா? இன்ஜினை பாதிக்குமா?
Updated on
2 min read

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கடந்த ஏப்ரல் 1 முதல், 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட ‘E20 பெட்ரோல்’ முதன்மை எரிபொருளாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2030-க்குள் எட்ட நினைத்த இந்த இலக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா எட்டி சாதனை படைத்துள்ளது.

இருப்பினும், இந்த அதிரடி மாற்றம் வாகன ஓட்டிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எத்தனால் கலப்பால் மைலேஜ் குறைகிறது; எஞ்சின் பாகங்கள் துருப்பிடிக்கின்றன என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால், மத்திய அமைச்சர்களோ, "பிரேசில் நாட்டைப் பாருங்கள், அங்கு எத்தனால் புரட்சியே நடக்கிறது" என்று உலக உதாரணத்தைக் காட்டி பதிலடி கொடுத்து வருகின்றனர். பிரேசில் 2003-ம் ஆண்டே 'பிளெக்ஸ்-ஃபியூல்' வாகனங்களை அறிமுகப்படுத்திவிட்டது.

இந்த வாகனங்களில் பெட்ரோல், எத்தனால் அல்லது இவை இரண்டும் கலந்த கலவை என எதை வேண்டுமானாலும் ஊற்றி இயக்கலாம். இன்று பிரேசிலில் விற்கப்படும் புதிய வாகனங்களில் 80% பிளெக்ஸ்-ஃபியூல் வாகனங்கள் தான். ஆனால் இந்தியாவில்?

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in