

தனது நிறுவனத்தின் அசுர வளர்ச்சியிலும் பரிணாமப் பயணத்திலும் தொடக்கம் முதலே தோளோடு தோள் நின்று உழைத்த நான்கு முக்கிய உயர் அதிகாரிகளுக்கு, உயர்மரக மாடல் கார்களைப் பரிசளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'சிலை' (SILAII) நிறுவனம்.
இந்தியாவின் முதல் சிற்பக் கலை சார்ந்த வீட்டு அலங்காரப் பிராண்டான ‘சிலை’, கடந்த அக்டோபர் 17 அன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த ஆடம்பரப் பரிசுகளை வழங்கியது.
நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி கிஷன், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் மிதுன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் நிஷாந்த், உற்பத்திப் பிரிவுத் தலைவர் சத்யா ஆகிய நால்வரே இந்தச் சிறப்பான கவுரவத்தைப் பெற்றவர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் தங்களது வரையறுக்கப்பட்ட பொறுப்புகளையும் தாண்டி, நிறுவனத்தின் உயர்வுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பங்காற்றியவர்கள். இதில் சிறப்பம்சமாக, ஊழியர்களின் குடும்பத்தினரே நேரில் வந்து தங்களுக்குப் பிடித்தமான காரைத் தேர்ந்தெடுக்கும் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.