மாறும் சந்தை, மாறாத பாடங்கள்

மாறும் சந்தை, மாறாத பாடங்கள்
Updated on: 
3 min read

இந்தியப் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது. சில்லறை வர்த்தகம் முதல் அதிவேக விநியோகம் வரை, பாரம்பரிய தொழில்கள் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்கள் வரை ஏற்படும் இந்த மாற்றங்களை ஒரு முழுமையான வடிவில் புரிந்துகொள்வது எளிதல்ல. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், குருகிராமைச் சேர்ந்த மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் (MDI) மாணவர் அமைப்பான ‘ஸ்ட்ராடஜிஸ்ட்’, ‘கன்சல்டிங் கேஸ்புக் 2026-27’-ஐ வெளியிட்டுள்ளது.

2021-லிருந்து வெளியிடப்படும் இந்த வருடாந்திர வெளியீடு, கன்சல்டிங் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வணிக சூழலை ஆழமாக அறிய விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள ஓர் அறிக்கை. இந்த அறிக்கை, வாகனம், வங்கி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என 20 தொழில் துறைகளின் விரிவான பகுப்பாய்வுடன் தொடங்குகிறது. லாபத்தன்மை, புதிய சந்தை நுழைவு, விலை நிர்ணயம், நிறுவன இணைப்புகள்-கையகப்படுத்துதல்கள், வளர்ச்சி உத்திகள் என பல்வேறு பகுப்பாய்வு கட்டமைப்புகளுக்கும் நிஜ வணிக நிகழ்வாய்வுகள் மூலம் தீர்வுகள் தரப்பட்டுள்ளன.

இவற்றில் சில முக்கிய போக்குகளை கீழே அலசலாம்: இந்திய சில்லறை வர்த்தகத்தில், பிளிங்க்இட், ஸெப்டோ போன்ற ‘க்விக்-காமர்ஸ்’ செயலிகளின் வேகமான வளர்ச்சி, நுகர்வோர் பொருட்களை வாங்கும் முறையையே அடியோடு மாற்றிவிட்டது. சில நிமிடங்களில் பொருட்கள் வீட்டுக்கு வந்துவிடும் வசதி காரணமாக, பாரம்பரிய சங்கிலித் தொடர் மளிகைக் கடைகள் கடுமையான சவாலை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, 500 கடைகள் கொண்ட ஒரு முன்னணி மளிகை நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் தனது சந்தைப் பங்கை 30-லிருந்து 22 சதவீதமாக இழந்துள்ளது. நுகர்வோரின் அதிவேக விருப்பம், விலை உணர்திறன், டிஜிட்டல் வசதி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in