இனி பங்குச் சந்தையில் தங்கம் வாங்கலாம்

இனி பங்குச் சந்தையில் தங்கம் வாங்கலாம்
Updated on
2 min read

இந்​தி​யர்​களுக்கு தங்கம் என்​பது வெறும் முதலீடு மட்​டுமல்​ல—பண்​பாடு, பரிசளிப்​பு, மற்​றும் நிச்​சய​மான மதிப்பு சேமிப்பு என்ற மூன்​றை​யும் இணைக்​கும் ஒரு முக்​கிய சொத்​து.

ஆனால் அதன் விலை தாறு​மாறாக உயர்ந்​து​விட்ட நிலை​யில் வெளிப்​படை​யான விலை, பாது​காப்​பான சேமிப்​பு, மற்​றும் சிறிய அளவில் முதலீடு செய்​யும் வசதி போன்​றவற்றை முதலீட்​டாளர்​கள் விரும்​பு​கின்​றனர்.

முதலீட்​டாளர்​களின் விருப்​பத்தை பூர்த்தி செய்​யும் வகை​யில், ஈஜிஆர் (Electronic Gold Receipt) என்று அழைக்​கப்​படும் மின்​னணு தங்க ரசீதுகள் தேசிய பங்​குச் சந்​தை​யில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கமாடிட்டி எக்​ஸ்​சேஞ்​களில் வர்த்​தக​மாகும் தங்​கத்தை டெலிவரி எடுக்​கும் முறை ஏற்​கெனவே நடை​முறை​யில் உள்​ளது. ஆனாலும் அதிலிருந்து இது வேறு​படு​கிறது. குறிப்​பாக கமாடிட்டி எக்​ஸெசேஞ்​சகளில் சிறு முதலீட்​டாளர்​கள் வாங்க முடி​யாது. ஈஜிஆர் என்​பது தங்​கத்​தின் உரிமையை குறிக்​கும் ஒரு டிஜிட்​டல் ஆவணம்.

இது இன்னும் முழுமையாக விற்பனைக்கு வரவில்லை. குரோ, ஜெரோ​தா, ஏஞ்​சல் ஒன் உள்​ளிட்ட தளங்​களில் பங்​கு​கள் அல்​லது பத்​திரங்​களைப் போல வாங்கி விற்​ப​தற்​கான வசதி விரை​வில் அறி​முக​மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஜிஆர்​-ன் முக்​கிய நன்​மை​கள்

* நகைக் கடைகளில் விற்​கப்​படும் தங்​கத்​தின் விலை ஊருக்கு ஊர் வேறு​படும். ஆனால், நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யான விலை​யில் (Uniform Pricing) தங்​கம் வாங்​கலாம்.

* பங்​குச் சந்​தை​யில் எளி​தாக வாங்க / விற்க முடி​யும்.

* தங்​க​மாக வைத்​திருப்​ப​தை​விட பாது​காப்​பானது மற்​றும் சுலப​மானது.

* தங்​கத்​தின் தரம் உறுதி செய்​யப்​பட்​டிருக்​கும்.

* எப்​போது வேண்​டு​மா​னாலும் பணமாகவோ தங்​க​மாகவோ மாற்​றிக் கொள்​ளும் திறன் உள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in