

முன்னணி வாகன உதிரிபாக நிறுவனம் ஒன்று, பிரபலமான கண் கண்ணாடி நிறுவனம் ஒன்று மற்றும் நன்கு அறியப்பட்ட தங்கக் கடன் நிதி நிறுவனம் ஒன்று ஆகியவற்றுக்கு இடையே உள்ள பொதுவான அம்சம் என்ன? இவை வெவ்வேறு துறைகளில் செயல்பட்டாலும், ஒவ்வொன்றும் இந்தியப் பங்குச் சந்தையில் ஒரு வாய்ப்பைப் பிரதிபலிக்கின்றன.
சுவாரசியமாக, முதலாவது 'லார்ஜ்-கேப்' பிரிவிலும், இரண்டாவது 'மிட்-கேப்' பிரிவிலும், மூன்றாவது 'ஸ்மால்-கேப்' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இது மல்டி-கேப் முதலீட்டின் ஒரு முக்கிய அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது.
கவர்ச்சிகரமான வர்த்தகங்கள் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவன அளவுக்குள்ளும் கட்டுப்படுத் தப்பட்டவை அல்ல. நிலைபெற்ற சந்தை முன்னணியாளர்கள், விரிவடைந்து வரும் நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட துறைகளில் செயல்படும் சிறிய நிறுவனங்கள் என அனைத்திலிருந்தும் வாய்ப்புகள் உருவாகலாம்.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை மூன்று பரந்த வகைகளாக அங்கீகரிக்கின்றன. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முதல் 100 இடங்களில் உள்ள `லார்ஜ்-கேப்' நிறுவனங்கள் பொதுவாக நிலைபெற்ற வணிக மாதிரிகளையும் ஒப்பீட்டளவில் நிலைத்தன்மையையும் வழங்குகின்றன.