மொழி என்றொரு தூரிகை | ஏஐ வாசி 13

மொழி என்றொரு தூரிகை | ஏஐ வாசி 13
Updated on: 
2 min read

கலை என்பது மனிதர்களின் தனிச்சொத்து. இவ்வாறு நம்பவே மனிதகுலம் விரும்புகிறது. ஆனால் இப்போது அதற்கும் போட்டி வந்துவிட்டது.

நாம், ‘ஆஹா... அற்புதம்’ என்று வியந்ததையெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டுகிறது செய்யறிவு. இது சற்றே மிகையாக தோன்றலாம். ஆனால், இல்லை என்பதை நாமே சிறிய சோதனைகள் மூலம் உணரலாம்.

படம் வரையும் ஏஐகளை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே வரைந்துகொடுக்கிறது. தூரிகையை எவ்வாறு பிடிப்பது என்று கூட உங்களுக்குத் தெரியத் தேவையில்லை.

உதாரணமாக, “19-ம் நூற்றாண்டு தஞ்சாவூர் ஓவியப் பாணியில், விண்வெளியில் மிதக்கும் ஒரு வீடு” இந்தப் ப்ராம்ப்ட்டை ஓவிய ஏஐயிடம் கொடுங்கள். மிகச் சிறந்த ஓவியமொன்றைச் சில நொடிகளில் வரைந்து தரும்.

இது வேண்டாம். வேறொரு வீடு வேண்டும் என்றால் சளைக்காமல் கட்டும். உணர்வும் உயிரும் இல்லாத கருவி ஒன்றால் இதைச் செய்ய முடியும் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்வரை எவருமே எதிர்பார்க்கவில்லை.

கவனம் குவித்துப் பல மணி நேரங்கள் செய்த செயல்கள் பலவும் இன்று குழந்தைகளின் விளையாட்டுகள் போலாகிவிட்டன. மேற்சொன்ன ப்ராம்ப்ட்டையே எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம். அதிலும் பிரத்தியேகமான ஓர் ஓவிய வகை. கற்பனையான காட்சி ஒன்று. இத்தனையையும் ஏஐயால் மிக எளிதாக ஒரு புள்ளியில் இணைக்க முடிகிறது. இன்று நாம் பெரிதும் பயன்படுத்தும் செய்யறிவுகள் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ என்னும் வகையைச் சேர்ந்தவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in