எண்ணித் துணிக கணிதம் | ஏஐ வாசி 12

எண்ணித் துணிக கணிதம் | ஏஐ வாசி 12
Updated on: 
2 min read

ஒரு வகுப்பறை. ஆசிரியர் கணிதப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். கரும்பலகையில் X-ன் மதிப்பைக் கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். மாணவர்களை 2 குழுக்களாகப் பிரிக்கலாம்.

‘எங்கே தேடுவேன் எக்ஸை’ என்னும் குழப்பத்தில் ஆழ்பவர்கள் முதல் ரகம். எக்ஸை தேடும் முயற்சியை ஒரு துப்பறியும் நிபுணரின் ஆர்வத்தோடு மேற்கொள்பவர்கள் 2-ம் ரகம். சூழல் ஒன்றுதான். ஆனால் முதல் குழுவினருக்குச் சோதனைக் காலம். இரண்டாம் குழுவினருக்கு விளையாட்டு.

இந்த 2 குழுவினருக்குமே போட்டியாக செய்யறிவு வந்துள்ளது. தொடக்கத்தில் சாட்ஜிபிடி வந்தபோது அது பலரையும் புல்லரிக்கச் செய்தது. ஆயினும் அவற்றின் ஆற்றல், கணிதம் என்று வந்துவிட்டால் நகைப்புக்குரிய ஒன்றாக இருந்தது.

எளிய கணிதக் கேள்விகளுக்குக் கூடத் தவறான விடைகளைத் தாராளமாகத் தந்தது. தவறாகச் சொல்லிவிட்டோமோ என்னும் கூச்சம் கொஞ்சம் கூட இல்லை. செய்யறிவுகள் மொழி மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடுத்த சொல் என்னவென்று ஊகிப்பதே அவற்றின் தலையாய பணி.

குத்து மதிப்பாகக் கண்டறிந்தால் போதும். ஆனால் கணிதம் என்று வந்துவிட்டால் அவ்வாறிருக்க முடியாது. கணிதத்தைப் பொறுத்தவரை ‘பாதி சரி’ என்று சொல்வதில் பொருளில்லை. ஒரே ஓர் எண் மாறினாலும் முழு விடையும் தவறிப்போகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in