

“சிப் உற்பத்தியைப் பொருத்தவரை குறைந்த செலவில் அவற்றை தயாரிப்பதற்கு இந்தியா மிகச்சிறந்த இடமாக உள்ளது. அதற்கான திறமை உள்ள ஒரே நாடு இந்தியா. இந்த தொழிலில் களமிறங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதையடுத்து செமிகண்டக்டர் வர்த்தகம் தற்போதைய 600 பில்லியன் டாலரிலிருந்து (ரூ.50 லட்சம் கோடி) இரட்டிப்பாகி 1 டிரில்லியன் டாலரைத் (ரூ.100 லட்சம் கோடி) தொடும்.
திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில் துறை பங்கேற்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்காக இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ஐஎஸ்எம்) மற்றும் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டுள்ளது" என்று கூறி உள்ளார் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
முன்வரும் நிறுவனங்கள்: வேதாந்தா-ஃபாக்ஸ்கான் ஜேவி, ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஐஎஸ்எம்சி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சிப் தயாரிப்பு ஆலைகளை அமைக்க 13.6 பில்லியன் டாலர் (ரூ.1.11 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்மொழிந்துள்ளன. மேலும், ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து 5.6 பில்லியன் டாலர் ஆதரவைக் கோரியுள்ளன. பெறப்பட்ட முன்
சிப் வகைகள்: செயல்பாட்டின் அடிப்படையில் சிப் நான்கு பிரிவுகளாக உள்ளன. அவை லாஜிக் சிப், மெமரி சிப், அப்ளிகேஷன் சார்ந்த ஒருங்கிணைந்த சிப் (ஏஎஸ்ஐசி), சிஸ்டம் ஆன்-ஏ-சிப் சாதனங்கள் (எஸ்ஓசிஎஸ்) ஆகும். மொழிவுகளில், இரண்டு முன்மொழிவுகளுக்கும் அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.