

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இம்மாநாட்டை முன்னிட்டு, ஆக்ஸ்பாம் அமைப்பு உலகின் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த அறிக்கையை வெளியிடுவது வழக்கம். இவ்வாண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வு பற்றி அந்த அறிக்கையிலிருந்து...
இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில் 40% பொருளாதாரரீதியாக மேல் நிலையில் உள்ள 1%பேரிடம் குவிந்துள்ளது. அடித்தட்டில் உள்ள 50% மக்களிடம் வெறும் 3% சொத்து மட்டுமே உள்ளது.
ரூ.8,000 கோடிக்கு மேல் சொத்துமதிப்பு கொண்ட இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை
23 கோடி நியாயமற்ற வரிவிதிப்பு
ரூ.3,608 கோடி கரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் சொத்துமதிப்பில் நாளொன்றுக்கு அதிகரித்தத் தொகை.
இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடி ஆகும். இந்தத் தொகையைக் கொண்டு
18 மாதங்களுக்கு பட்ஜெட் போடலாம்.
இந்தியாவில் உள்ள பில்லியனர்களுக்கு அவர்களது மொத்த சொத்தின் மீது ஒருமுறை மட்டும் 2 சதவிகிதம் வரி விதித்தால் ரூ.40,423 கோடி கிடைக்கும். இதைக் கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதியை வழங்க முடியும்.
நியாயமற்ற வரிவிதிப்பு
# இந்தியாவில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள் பொருளாதாரரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரை விட 6 மடங்கு அதிகம் வரி செலுத்துகின்றனர்.
# இந்தியாவில் ஜிஎஸ்டி வசூலில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களின் பங்களிப்பு 64%
# பொருளாதார அடுக்கில் மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரின் பங்களிப்பு 3%
பாலின பாகுபாடு
ஆண்களுக்கு 1 ரூபாய் ஊதியம் வழக்கப்படும் இடத்தில் பெண்களுக்கு 63 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது.
தீர்வு
பெரும் பில்லியனர்களுக்கு அதிக வரி விதித்து அதை சமூக மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஜிடிபியில் 6 சதவீதமாகவும் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு 2.5 சதவீதமாகவும் அதிகரிக்க வேண்டும்.