

நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட மிக முக்கியமாக இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று காலத்தையும் முந்தி செயல்படுவது. அதுவும் கரோனா பேரழிவு எண்ணற்ற தளங்களில் நிலையற்றத்தன்மையை உருவாக்கியிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டுகள் குறிப்பிடத்தக்க லாபத்தை வரும் ஆண்டுகளில் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி தகுதியான ஃபண்டுகளை அடையாளம் காண உதவும் நான்கு அம்சங்கள் பின்வருவன.
1 வலுவான நிதிநிலையுடன் சிறப்பான வருமான வளர்ச்சியும் உள்ள நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையில் தனித்துவமாக செயல்பட வாய்ப்புள்ளது.
2 கிராமப்புற சார்பு - கிராமப் பொருளாதாரம் சார்ந்த நிறுவனப் பங்குகளை அதிக அளவில் உள்ளடக்கிய மியூச்
சுவல் ஃபண்ட் திட்டங்கள் மோசமான காலங்களில் நிலையான டிமாண்டுடன் நல்ல வருமானத்தைத் தரக்கூடியவையாக இருக்கும்.
3 பொருளாதார நடவடிக்கைகள் சார்ந்து ஏற்படும் இடையூறு மற்றும் இடம்பெயர்வு ஆகிய இரண்டும் நிலையான முதலீட்டு உத்திகள். உதாரணமாக கரோனா பேரழிவு நெருக்கடியினாலோ அல்லது விநியோக சங்கிலி இடம்பெயர்வினாலோ பயன் அடைந்த நிறுவனங்களைத் தங்கள் போர்ட்ஃபோலியோவில் கொண்ட ஃபண்டுகள் லாபம் தரக்கூடியவையாக இருக்கும்.
4 நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கான அல்லது மதிப்பு உயர்த்துதல் சார்ந்த அணுகுமுறை தற்போது அதுவும் சந்தையின் மதிப்பு அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிற தருணத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. அதிகப் பாதுகாப்பும் அதேசமயம் நல்ல வருமானத்தையும் தரக்கூடிய பங்குகளைக் கொண்ட திட்டங்கள் நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலத்துக்கு சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.
இதுபோன்ற அம்சங்களுடன் கவனமாக உருவாக்கப்பட்ட ஈக்விட்டி திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் 22 உள்ளன. இவை ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளைக் கையாள்கின்றன. மேலும் ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டுகள், சூழலுக்கேற்ப போர்ட்ஃபோலியோவில் தேவையான அதிகபட்ச தீர்வுகளைச் செயல்படுத்தும். இந்த அணுகுமுறையானது பன்முகத் தன்மையைக் குறைப்பதல்ல மாறாக அந்த போர்ட்ஃபோலியோவில் உள்ளடக்க தகுதியுள்ள முக்கியமான பங்குகளை உள்ளே கொண்டுவருவதாகும்.
சந்தை எதிர்வினையுடன் குறைந்த அளவு தொடர்புடையதாக இருக்கும் அம்சத்துடன், கூடவே இந்த ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டுகள் நெருக்கடியான நிலைகளில் தனித்து செயல்படும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. 2020ம் ஆண்டில் ஜனவரி 17 முதல் மார்ச் 23 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் 40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்த போதும், நான்கில் மூன்று ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டுகள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு சென்செக்ஸை விடவும் நல்ல ரிட்டர்னை கொடுத்தன.
இறுதியாக...w
முதலீட்டாளராக நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால் பாட்டம் அப் அணுகுமுறையின் மூலம் தேர்ந்தெடுத்த நிறுவனப் பங்குகள் கொண்ட திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவைதான் மியூச்சுவல் ஃபண்ட் உலகத்தின் ஒரு பகுதியான போகஸ்டு ஃபண்டுகள். இவை நடைமுறை சார்ந்ததாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருப்பதால் சூழலுக்கேற்ப செயல்பட்டு நல்ல பலனை அறுவடை செய்யும் தன்மை கொண்டவையாக உள்ளன.
- கணேஷ் பத்மநாபன்,
மணிகுரோம் கேபிடல் அட்வைசர்ஸ்