ஹீரோவின் பேட்டரி ஸ்கூட்டர்

ஹீரோவின் பேட்டரி ஸ்கூட்டர்
Updated on
1 min read

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று
ஆப்டிமா இஆர்; மற்றொன்று என்ஒய்எக்ஸ் இஆர். இதில் ஆப்டிமா இஆர் விலை ரூ.68,721 எனவும், என்ஒய்எக்ஸ் இஆர் விலை ரூ.69,754 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்கூட்டர்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றில் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் எவ்வித சிரமமும் இன்றி அதிக தொலைவு வரை பயணிக்க முடியும். இதன் லித்தியம் அயன் பேட்டரி நான்கு மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும்.

ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் நூறு கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி செல்பவர்கள் ஆகியோருக்கானதாக ஆப்டிமா இஆர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறு வியாபாரிகள், டெலிவரி பாய் ஆகியோர்களுக்கானதாக என்ஒய்எக்ஸ் இஆர் வடிமைக்கப்பட்டிருக்கிறது. முறையான பராமரிப்பை மேற்கொண்டால் இதன் பேட்டரி 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தனது சேவையை தென் இந்தியாவில் மேலும் விஸ்தரிப்பதற்காக, பெங்களூரில் அதற்கான அலுவலகம் ஒன்றை திறந்துள்ளது. பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்திருக்கும் நிலையில், வாகனம் வாங்க விரும்புவோர் அந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி பேட்டரி வாகனங்களை வாங்கி பயனடையலாம்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in