Published : 16 Mar 2015 10:09 AM
Last Updated : 16 Mar 2015 10:09 AM

வெற்றி மொழி: பெஞ்சமின் பிராங்க்ளின்

1706-ம் ஆண்டு பிறந்த பெஞ்சமின் பிராங்க்ளின், அமெரிக்க உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை தோற்றுவித்த பெருமை பெற்றவர்.

அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும், பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராகவும் விளங்கினார். சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலையும் பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் கொண்டிருந்தார்.

மின்சாரம் பற்றிய ஆய்வின் மூலம், மின்னலில் மின்சாரம் இருப்பதையும், இடிதாங்கியையும் கண்டுபிடித்தார். வணிகத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டு, குறிப்பிடத்தக்க நிலையை அடைந்தார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத பிராங்க்ளின், இயற்பியல் உலகின் சிறந்த விஞ்ஞானியாக போற்றப்படுகிறார்.

$ தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், சாதனை மற்றும் வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.

$ தயாராவதில் தோல்வி என்றால், நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று அர்த்தம்.

$ நல்ல மதிப்பை பெறுவதற்கு பல நல்ல செயல்கள் தேவைப்படுகிறது ஆனால் அதை இழப்பதற்கு ஒரே ஒரு மோசமான செயலே தேவைப்படுகிறது.

$ சின்ன சின்ன செலவுகளில் ஜாக்கிரதையாக இருங்கள்; ஒரு சிறிய கசிவு ஒரு பெரிய கப்பலை மூழ்கடித்துவிடும்.

$ அறிவுள்ளவர்களுக்கு ஆலோசனை தேவையில்லை, முட்டாள்கள் ஆலோசனையை கேட்கப் போவதில்லை.

$ சிறந்த வாசிப்புக்கு ஏற்றதை எழுதுங்கள் அல்லது சிறந்த எழுத்துக்கு ஏற்றதை செய்யுங்கள்.

$ சீக்கிரமாக படுக்கைக்கு செல்வதும் சீக்கிரமாக படுக்கையைவிட்டு எழுவதுமே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், அறிவையும் உருவாக்குகின்றது.

$ தீயப் பழக்கங்களை தகர்த்தெறிவதை விட தடுப்பதே எளிதானது

$ விடாமுயற்சி என்பது அதிர்ஷ்டத்தின் தாயைப் போன்றது.

$ இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப கிடைக்கப் போவதில்லை.

$ சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.

$ சிறந்த சொல்லைவிட சிறந்த செயலே மேன்மையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x