வெற்றி மொழி: பெஞ்சமின் டிஸ்ரேலி

வெற்றி மொழி: பெஞ்சமின் டிஸ்ரேலி
Updated on
1 min read

1804- ஆம் ஆண்டு பிறந்த பெஞ்சமின் டிஸ்ரேலி இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மற்றும் எழுத்தாளர். யூத குடும்பத்தில் பிறந்து பின்னர் தன் தந்தையின் மூலம் குடும்பத்துடன் கிறித்துவத்திற்கு மாறியவர். இலக்கியத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பெஞ்சமின் டிஸ்ரேலியின் நாவல்கள் அந்நாளில் பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றிருந்தன.

இலக்கியம் போன்றே அரசியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக திகழ்ந்த பெஞ்சமின் டிஸ்ரேலி, 1868 ஆம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இறுதி காலத்திலும் எழுத்துத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் டிஸ்ரேலி.

$ தனக்கான வாய்ப்பு வரும்போது மனிதன் தயாராக இருப்பதே, வாழ்க்கையில் அவன் வெற்றி பெறுவதற்கான ரகசியம்.

$ முயற்சி எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியினை கொடுப்பதில்லை; ஆனால், முயற்சி இல்லாமல் ஒருபோதும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

$ மோசமானவற்றிற்காக நான் தயாராகவே இருக்கின்றேன்; ஆனால், சிறந்தவற்றிற்கான நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

$ சாமர்த்தியம் இல்லாமல் உங்களால் எதுவும் கற்றுக்கொள்ள முடியாது.

$ நேரம் விலை மதிப்பற்றது; ஆனால் உண்மை நேரத்தைவிட அதிக விலை மதிப்பற்றது.

$ எங்கு அறிவு முடிவடைகின்றதோ அங்கு மதம் தொடங்குகின்றது.

$ மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.

$ பயணங்கள் நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கின்றன.

$ அனுபவம் என்பது எண்ணத்தின் குழந்தையைப் போன்றது; எண்ணமானது செயல்பாட்டின் குழந்தையைப் போன்றது.

$ இப்போதெல்லாம், நடத்தை என்பது எளிதாகவும் மற்றும் வாழ்க்கையானது கடினமான ஒன்றாகவும் உள்ளது.

$ விளக்கம் அளிப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் வாழ்க்கையில் வேறு எதுவுமில்லை.

$ கஷ்டத்தின் மூலம் கிடைக்கும் பாடத்தினைப் போன்ற சிறந்த கல்வி வேறு எதுவுமில்லை.

$ அமைதி என்பது உண்மையின் தாயைப் போன்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in