வெற்றி மொழி - நெப்போலியன் பொனபார்ட்

வெற்றி மொழி - நெப்போலியன் பொனபார்ட்
Updated on
1 min read

1769 முதல் 1821 வரை வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டின் படைத் தளபதி மற்றும் பிரான்சின் முதல் பேரரசர். பிரெஞ்சுப் புரட்சியின் போது நடைபெற்ற போர்களை நடத்தியதன் வாயிலாக முன்னேற்றம் அடைந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படையெடுத்து, வெற்றிபெற்று பல நாடுகளை பிரான்சுக்குக் கீழ் கொண்டுவந்தார். நெப்போலியனின் லட்சியம், விவேகம் மற்றும் திறமையான இராணுவ உத்திகள் மூலம் அவரது பேரரசு விரிவடைந்தது. உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இராணுவ தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

1. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.

2. உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.

3. சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.

4. சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.

5. இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.

6. வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.

7. இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது.

8. முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார்.

9. நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.

10. நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.

11. வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.

12. நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in