வணிக வீதி
கார், ஏசி, பிரிட்ஜ் வாங்குவதை தள்ளிப்போடும் வாடிக்கையாளர்கள்
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி விகிதம் என்பது 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு முறையாக உள்ளன.
இது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கார், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18% ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
