

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, 'போனஸ் பங்குகள்' மற்றும் 'ஸ்ப்ளிட்' என்ற சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்கலாம். இவை இரண்டும் பங்கு எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அதற்குப் பின்னணியிலான காரணங்கள் மற்றும் விளைவுகள் வேறுபடுகின்றன.
போனஸ் பங்குகள் என்றால் என்ன? - நிறுவனங்கள் வெளியிடும் ஒவ்வொரு பங்குக்கும் ஒரு முக மதிப்பு (Face Value) இருக்கும். எடுத்துக்காட்டாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் முகமதிப்பு ரூ.10 ஆக இருக்கலாம். பங்குகளின் எண்ணிக்கையை முகமதிப்புடன் பெருக்கினால் கிடைப்பதுதான் பங்கு மூலதனம் (Equity Capital).