

இரண்டு காதிலும் தீப்புண்ணுடன் வந்த கணேஷிடம் டாக்டர் 'என்ன ஆயிற்று' என்று கேட்டார். “நான் ட்ரெஸ் அயர்ன் பண்ணும்போது டெலிபோன் மணி அடித்தது. அப்போ அயர்ன் பாக்ஸ இடது காதில் வச்சுட்டேன்” என்றார் கணேஷ். “சரி வலது காதில் எப்படி ஆச்சு?” என கேட்டார் டாக்டர்.
“இடது காதில் கேக்காததால வலது காதில் வச்சுப் பார்த்தேன்” என்றார் கணேஷ். மேற்படி நகைச்சுவையை படித்து, சிரித்துவிட்டு கடந்து போகலாம். ஆனால் பங்குச் சந்தையில் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன் (எப் அண்ட் ஓ) வர்த்தகத்தில் கையை சுட்டுக்கொண்டவர்கள், அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தற்போது தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.