5 ஆண்டுக்குப் பிறகு கட்டுக்குள் வந்த பணவீக்கம்

5 ஆண்டுக்குப் பிறகு கட்டுக்குள் வந்த பணவீக்கம்
Updated on
1 min read

மத்திய அரசுக்கு சற்று ஆறுதலான செய்தி கிடைத்திருக்கிறது. சமீப ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய சவாலாக இருந்துவந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது. நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியால் இந்த இலக்கை அடைய முடியவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜூலையில் அது 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் உணவுப் பொருட்கள் சார்ந்த பணவீக்கம் 11.5 சதவீதத்திலிருந்து 5.42 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்துள்ள நிலையில், சில்லறை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in