

உயிர் பதிப்பகத்தின் சார்பில் 'சிறியதே அழகு' வரிசையில் 8 வண்ணக் குறுநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏ.சண்முகானந்தத்தின் எழுத்தில் ‘மரங்கொத்திகள்', ‘பூநாரைகள்', ‘செம்மார்புக் குக்குறுவான்', ‘இரயில் பூச்சி', ‘தட்டான்களைத் தவறவிட்ட காலம்' ஆகிய ஐந்து நூல்களும் ‘கொம்பன் ஆந்தைகள்' (பேராசிரியர் த.முருகவேள்), ‘தைலான் என்கிற தகைவிலான்' (வே.ராமசாமி), ‘பூச்சியியலின் மூதாய்' (அருண் நெடுஞ்செழியன்) ஆகிய மேலும் 3 நூல்களும் வெளியாகியுள்ளன.
இந்த நூல்கள் தமிழ்நாட்டில் பார்க்கப்படக்கூடிய பறவைகள், பூச்சிகளைப் பற்றி முழு வண்ணப் பக்கங்களில் அறிவியல்பூர்வமான காட்டுயிர் செய்திகளைக் கூறுகின்றன. பெரும்பாலான நூல்கள் காட்டுயிர் அனுபவம், தன்னனுபவம், வட்டாரக் கதைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பது வாசகருக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது.
சிறியதே அழகு வரிசை - 8 நூல்கள்,
உயிர் பதிப்பகம்,
தொடர்புக்கு: 98403 64783