கடல் பறவைகள் ஏன் முக்கியம்?

கடல் பறவைகள் ஏன் முக்கியம்?
Updated on
3 min read

உலகெங்கிலும் உள்ள 11 ஆயிரம் பறவை இனங்களில் 370 (3.36%) மட்டுமே கடல் பறவைகள். இவற்றுள் 116 இனங்கள் அழியும் தறுவாயிலும் 20 இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளன. அதே வேளையில் 3.36% இருக்கும் கடல் பறவைகளின் உயிர்த்திரள் (Biomass) நிலப் பறவைகளைவிட அதிகம் என்பது ஆச்சரியமான விஷயம்.

கடல் பறவைகள் வாழ்நாளின் பெரும் பகுதியை ஆழ்கடல் பகுதிகளிலேயே கழிக்கின்றன. அதேநேரம் அவை இனப்பெருக்கம் செய்யவும் முட்டையிடவும் தீவு நிலப்பரப்பு களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன.

சூழலியல் முக்கியத்துவம்

கடல் சூழலியல் தொகுதிகளில் உணவுச் சங்கிலிகளின் நிலைத்தன்மையைக் கடல் பறவைகள் உறுதிப்படுத்துகின்றன. அவற்றால் ஏற்படும் ஊட்டச்சத்துச் சுழற்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் கடல் பறவைகள் சிறந்த உயிர் வளக் குறியீட்டு உயிரினமாக (Bio indicator) அறியப்படுகிறது.

கூனிப்பொடி (krill), கணவாய் மீன், பிற சிறிய மீன்கள் கடல் பறவைகளின் முதன்மை உணவு. அமெரிக்க ஆய்வாளர் ஹாலி பி. ஜோன்ஸ் குழுவின் சமீபத்திய ஆய்வுக் குறிப்பின்படி கடல் பறவைகள் ஓர் ஆண்டிற்குச் சராசரியாக 5 முதல் 9 கோடி டன் அளவுக்குக் கடல் மீனை உணவாக உட்கொள்கின்றன.

இது உலக அளவில் வணிகரீதியாகப் பிடிக்கப்படும் மீன்களின் அளவுக்கு நிகரானது. இதன் காரணமாக அவற்றின் எச்சம்/கழிவு (guano) நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துகள் நிறைந்ததாக உள்ளது.

மேலும் தீவுப் பகுதிகளில் இப்பறவைகளின் இறகுகள், முட்டை ஓடுகள், இறந்த பறவைகளின் எலும்புகள் மூலம் கால்சியம், கார்பன் போன்ற முக்கிய ஊட்டச்

சத்துகளும், தாமிரம், துத்தநாகம், இரும்பு, நிக்கல், கேட்மியம், ஈயம் போன்ற தாது வளங்களும் அதிக அளவு சேகரமாகின்றன.

வளம் நிறைந்த இக்கழிவுகள் தீவுகள், அவற்றின் அருகில் உள்ள சூழலியல் தொகுதிகளைச் செழிப்படைய வைப்பதாக வேளாண், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பெரு நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, இஸ்லா மசோர்கா, இஸ்லா குவானேப் சூர் ஆகிய இரண்டு தீவுகளில் மட்டும் கடல் பறவைகளின் மொத்த எச்சங்கள் 10,921 முதல் 26,142 டன் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in