எது முக்கியம்: பசுமையா.. உயிர்ச் செழுமையா?

எது முக்கியம்: பசுமையா.. உயிர்ச் செழுமையா?
Updated on: 
2 min read

ஓங்கி உயர்ந்த மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த மலைகள், பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகள், தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள் எனப் பசுமையைக் காணும்போதெல்லாம் ‘இயற்கை எவ்வளவு அழகானது!’ என்று வியந்து ரசிக்கிறோம். ஆனால், கோடைக்காலத்தில் அதே நிலப்பரப்பில் பல மரங்கள் இலைகளை உதிர்த்து, புல்வெளிகள் காய்ந்து, மலைகளின் பசுமை குறையும்போது, ‘இயற்கை அழிந்து விட்டது’ என்று வருந்துகிறோம். இயற்கையைப் பற்றிய நமது புரிதலில் ஒரு முக்கியமான குழப்பம் நிலவுவதை இந்த இடத்தில் புரிந்துகொள்ள முடிகிறது.

பசுமைதான் அடையாளமா?

ஒரு நிலப்பரப்பின் இயற்கைத்தன்மையை அங்கு காணப்படும் பசுமையின் அளவைக் கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது. அங்கு வாழும் தாவரங்களின் பல் வகைமை, அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள், மண், நீர், நுண்ணுயிர்கள், உணவுச் சங்கிலிகள், ஊட்டச்சத்துச் சுழற்சிகள், பருவநிலைக்கு ஏற்ப நிகழும் இயற்கையான மாற்றங்கள் ஆகியவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தே ஒரு சூழலின் தன்மையை உருவாக்குகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in