பனைப் பொருள்களைத் தேடும் சுற்றுலா

பனைப் பொருள்களைத் தேடும் சுற்றுலா
Updated on: 
2 min read

பனையும் பனை சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாக, பனைச் சுற்றுலாவை முன்னெடுக்கிற முயற்சிகள் அரும்பி வருகின்றன. “அதை வரலாறாக, பண்பாடாக, இலக்கியமாக, பொருளாதாரமாக, சமயமாகப் பிணைத்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்கிறார் ‘பனை இயக்கத்தை’ நடத்தி வரும் காட்சன் சாமுவேல். அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘பனைச் சுற்றுலா’ தொடர்பான கருத்தரங்கில், தனது எண்ணங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

உலகச் சுற்றுலா நாளை ஒட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரியும் ஏற்றம் கம்யூனும் இணைந்து இந்தக் கருத்தரங்கு, கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. குமரி மாவட்டத்தில் உழவர்கள் அணியும் பனை யோலைத் தொப்பியைத் தேடி, கல்லூரிக் காலத்தில் காணிக் குடியிருப்புக்கு காட்சன் சென்றிருக்கிறார். அங்கே குடைப்பனையைக் கண்டிருக்கிறார்.

பனை குறித்த தேடல் அன்று இவருக்குள் விதைகொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பனை சார்ந்த சுற்றுலாவைப் ‘புனிதப் பயணமாக’ முன்னெடுக்கிற எண்ணம் உருவெடுத்தாலும், கம்போடியாவுக்குப் போயிருந்தபோது அது உறுதிப்பட்டதாகத் தெரிவித்தார்.

“கம்போடியக் கிராமம் ஒன்றில் காயவைத்த கிழங்கையும் பானகத்தையும் அருந்தத் தந்தார்கள். ‘நாம் சாதாரணமாகப் பார்க்கிற விஷயங்கள்கூட ரொம்ப முக்கியமானவைதான்’ என்பது புரிந்தபோது, பனைச் சுற்றுலாவைச் செயல்படுத்தலாம் என்கிற நம்பிக்கை வந்தது” என்கிறார் காட்சன்.

பனைப் பயணம்

மும்பையில் வசிக்கும் இவர், 2016இல் அங்கி ருந்து கன்னியாகுமரிவரை 18 நாள்களுக்குப் ‘பனை சார்ந்த விஷயங்களைத் தேடி’ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது கிடைத்த அனுபவங்களின் துணையோடு, 2019இல் பனைச் சுற்றுலா மாதிரியை உருவாக்கியிருக்கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in