காட்டுப்பன்றிகள் படும் பாடு

காட்டுப்பன்றிகள் படும் பாடு
Updated on
2 min read

தொடர் அழுத்தம் காரணமாக ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் அருகிலுள்ள அம்மனகொரை என்கிற ஊரில் அண்மையில் 5 காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் வரையிலும் 45 காட்டுப்பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவிக்கிறது.

பயிர்களுக்குக் காட்டுப்பன்றிகள் சேதம் விளைவிப் பதாகவும் பொருளாதார நட்டம் ஏற்படுகிறது எனவும் அதனால் அவற்றைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று விவசாயிகள் கொடுத்த அழுத்தத்தால் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல சில கட்டுப்பாடுகளோடு வனத் துறை அனுமதித்துள்ளது.

காப்புக் காடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரை சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளைச் சுடக் கூடாது, 2 முதல் 3 கி.மீ. வரை சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும், மூன்று கி.மீ. தாண்டி வெளியே வந்துவிட்ட காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல வனத் துறையினருக்கு மட்டும் அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளையில், சுடப்படும் காட்டுப்பன்றிகள் கருவுற்றிருக்கக் கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.

கேரளத்தில் காட்டுப்பன்றிகளைச் சுட அந்தந்த ஊராட்சி நிர்வாகமே முடிவுசெய்து கொள்ளலாம் என்ற உத்தரவுக்கு இணங்க அம்மாநிலத்தில் இதுவரையிலும் சுமார் 5,200 காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன.

இங்கும் அதுபோன்று ஊராட்சி நிர்வாகமே முடிவு செய்துகொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தங்கள் நிலத்திற்குள் நுழையும் காட்டுப்பன்றிகளைத் தாங்களே சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் அழுத்தம் தருகிறார்கள். இதைப் பார்க்கும்போது வனத் துறையினரின் தேவையற்ற கெடுபிடிகள் மீதான கோபத்தைக் காட்டுப்பன்றிகள் மீது விவசாயிகள் காட்டுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

விவசாயிகள் தங்களுக்கு உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தெல்லாம் பேசாமல், போராடாமல் காட்டுப்பன்றிகளால்தான் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப் படுகிறது என்று பேசுவது சரிதானா? காட்டுப்பன்றிகளால் மோசமான பாதிப்பு ஏற்படும் இடங்களில் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் தவறில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in