ஐரோப்பாவிலிருந்து வந்துள்ள ரோசா மைனா!

ஐரோப்பாவிலிருந்து வந்துள்ள ரோசா மைனா!
Updated on
2 min read

ஐரோப்பா கண்டத்தில் இருந்து சூறைக்குருவிகள் (ரோஸி ஸ்டார்லிங்) எனப்படும் வெளிநாட்டு மைனாக்கள் பல்லாயிரக்கணக்கில் தென் மாவட்டங்களுக்கு வலசை வந்துள்ளன. காலை, மாலை வேளையில் வானில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் இப்பறவைகள் காண்போர் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

இதன் அறிவியல் பெயர் Pastor roseus. ரோசா மைனா (இது மைனாவின் உறவுப் பறவை) என மக்களால் அழைக்கப்படும் இந்த மைனா, ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்தது. இளஞ்சிவப்பு நிற உடலால் எளிதில் இது அடையாளம் காணப்படுகிறது.

இந்தப் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. அங்கு குளிர்காலத்தை எதிர்கொள்ளும்போது உணவு, ஏற்ற காலநிலையைத் தேடி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு வலசை வருகின்றன.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அதிகம் வருகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in