மழையும் மலர்களும் | காட்டு வாழ்க்கை 15

கடற்கொஞ்சி

கடற்கொஞ்சி

Updated on
2 min read

வான்மழைக்கு ஏங்கி வாடின பல்லுயிர்கள். மழையின்றி நாள்கள் நகர்ந்தன. தவிக்கும் உயிர்களைத் தழுவி அணைக்க இயற்கை அன்னை மனம் இரங்கி மழையெனப் பொழிந்தாள்‌. மண்ணுயிர்கள் பிழைத்தன. மாரியை வாழ்த்தின. பொங்கிய மகிழ்வால் பொலிவுடன் கிளர்ந்தன. காடெங்கும் பசுமை மலரத் தொடங்கியது.

பரவும் நறுமணம்

கடற்கொஞ்சிக் குறுமரம் (Murraya paniculata) களிப்பு எல்லாம் கூட்டித் தன்னுடல் முழுக்க அரும்புகளை விரித்தது. நான்கே நாள்களில் நறுமணம் பரப்பும் மலர்கள் மெதுவாக விரிந்தன. கரும்பச்சை இலைகளில் வெண்ணிற மலர்களின் வண்ணம் கலந்தது. வண்ணம் கண்ட வண்டுகள், அதிலே மொய்த்தன.

தேன் உண்ட களிப்பில் தரையில் மலர்கள் விரித்த விரிப்பில் மயங்கிக் கிடந்தன. அந்தக் காட்சியைக் கண்டு களித்த மனம் வறட்சியால் அடைந்த கவலையை மறந்தது. கடற்கொஞ்சி மலர்கள் கடத்தும் நறுமணம் இரவில் வீட்டினுள்ளும் பரவும்.

செயற்கை மணமூட்டிகள் எவையும் அதற்கு ஈடாகாது. மரத்தின் கீழும் வீட்டுச் சுவரின் அருகிலும் கொட்டிக் கிடக்கும் மலர்கள் காய்ந்து சிதையும்வரை அவற்றை நாங்கள் பெருக்கி அப்புறப்படுத்துவதில்லை.

துளிர்க்கும் காலம்

பொன்அரளி மரமும் அளவின்றிப் பூக்களைச் சொரியும். பச்சை இலைகளுக்கு இடையில் ஒளிரும் மஞ்சள் வண்ண மலர்கள் பேரழகு. சில நாள்களில் மலர்கள் உதிர்ந்து கீழே பரவியிருக்கும் பசும்புல்லில் பாய் விரிக்கும். தேன்சிட்டு, பூஞ்சிட்டு, வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் அனைத்தும் மலர்களை நாடிவரும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in