பனை எனும் புதையல் | ஆயிரம் மலர்களே மலருங்கள் 17

பனை எனும் புதையல் | ஆயிரம் மலர்களே மலருங்கள் 17
Updated on
3 min read

இயற்கை வரலாறு குறித்த ஒரு நூலை மொழிபெயர்த்தபோது, அதில் Fishtail palm என்று இருந்தது. மொழிபெயர்ப்பாளர்கள் பொதுவாகச் செய்யும் தவறை, அந்த இடத்தில் நானும் செய்தேன். மீன்வால் பனை என்று அப்படியே எழுத்தெழுத்தாக மொழிபெயர்த்துவிட்டேன். பிறகு ஏதோ சந்தேகம் மனதில் தட்ட, அதன் பெயர் தாழி/தாளிப்பனையாக இருக்குமோ என்று தோன்றியது.

நூலை இறுதிசெய்வதற்கு முன் பேராசிரியர் நரசிம்மனிடம் பேசியதால் கூந்தல்பனைதான் சரியான பெயர் எனத் தெரியவந்தது. இது காரணப் பெயர். இதன் மலர்களும் காய்களும் சரம்சரமாக விரித்துப்போட்ட கூந்தலைப் போல் தொங்குவதால், இதற்குக் கூந்தல்பனை (Caryota urens) என்று பெயர் வந்ததாகத் தெரிவித்தார்.

தெற்காசியாவுக்கு உரிய அலங்காரப் பனைமரம் இது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. மரத்தின் வெளிப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். 35 அடி உயரம்வரை வளரும்.

இந்த மரத்தின் இலை மீன் வாலைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் அப்படிப் பெயர் வந்தது. இதன் பதநீர் அருந்தக்கூடியது. ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கக் கூடியது. கருஞ்சிவப்பு நிறத்தில் உருண்டையான காய்கள், பழங்கள் கையில் பட்டால் அரிப்பை உருவாக்கும்.

தாளிப்பனை: அதேநேரம், கிராமப்பகுதிகளில் கூந்தல்பனை-தாளிப்பனை சார்ந்த பெயர்க்குழப்பம் காணப்படுகிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாத்தூர் பகுதியில் 2004 வாக்கில் பூத்திருந்த தாளிப்பனை ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அப்போது கூந்தப்பனை என்றே அதைக் குறிப்பிட்டார்கள்.

தாளிப்பனை (talipot palm / Corypha umbraculifera) அதன் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை பூத்து மடியக்கூடியது என்பது அதன் தனித்துவம். இதன் மலர்கள் மரத்தின் உச்சியில் கோபுரம் போன்ற வடிவத்தில் பூத்திருக்கும். இந்த இரண்டு மரங்களைவிடப் பெரிதும் அறியப்பட்ட, பரவலாகப் பயன்பாட்டில் உள்ள மரம் பனை.

தமிழ்நாட்டின் மாநில மரமும்கூட. பண்டைக் காலத்தில் சேர மன்னர்களின் குடிப்பூவாகப் பனை இருந்தது. பனையின் இளங்குருத்து ஓலையைப் பிளந்து, அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியைக் குடிப்பூச் சின்னமாகக் சூடிக்கொண்டிருக்கிறார்கள். பனைக்குப் போந்தை, பெண்ணை ஆகிய பெயர்களும் சங்க நூல்களில் வழங்கப்பட்டுள்ளன. இளம் பனை போந்தை எனப்பட்டது.

ஆண்-பெண் மரங்கள்: பனையை மரம் என்று நாம் அழைத்தாலும், தமிழின் முதன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் இதைப் புல் வகை என்கிறது:

‘புறக்காழ் எனவே புல் என மொழிப’ - தொல்காப்பியம் பொருளதிகாரம் 9: 86

<div class="paragraphs"><p>பனை ஆண் பூ</p></div>

பனை ஆண் பூ

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in