கீரியும் பறவைகளும் | காட்டு வாழ்க்கை 06

கீரி | படம்: கல்யாண் வர்மா |

கீரி | படம்: கல்யாண் வர்மா |

Updated on
2 min read

பல ஆண்டுகளாகக் கீரிகள் குடும்பத்துடன் எங்கள் காட்டில் உலவுகின்றன. பள்ளிப் பருவத்தில் தமிழ்த் துணைப்பாட நூலில் கீரியைப் பற்றிப் படித்த கதையை அவை நினைவூட்டுகின்றன.

அந்தக் கதை: தொட்டிலில் தூங்கும் குழந்தைக்குக் காவலாகக் கீரியை வைத்துவிட்டுக் குழந்தையின் தாய் தண்ணீர் எடுத்துவரக் குழாயடிக்குச் சென்றார். அவர் குடத்துடன் திரும்பி வந்தபோது வீட்டின் முன்னே வாயில் ரத்தம் வழிய கீரி நின்றுகொண்டிருந்தது.

அதைக் கண்டதும் கீரி குழந்தையைத்தான் கடித்துவிட்டது என எண்ணி, சற்றும் தாமதிக்காமல் தண்ணீர்க் குடத்தை அதன்மீது வீசி அவர் அதைக் கொன்றுவிட்டார். உள்ளே வந்து பார்த்தபோது அங்கு வந்த பாம்பைக் கீரி கொன்று குழந்தையைக் காப்பாற்றி இருந்ததை அறிந்தார்.

ஆராயாமல் ஆத்திரத்தில் அறிவிழந்து குழந்தையைக் காத்த கீரியைக் கொன்றுவிட்டேனே என வருந்துவார். ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்னும் பழமொழியை அக்கதை நினைவூட்டும்.

நம் காட்டிலுள்ள கீரிகளுக்கு வருவோம். இங்கே சிறிய அளவில் நிலக்கடலை பயிரிட்டிருந்தோம். அவை நன்றாகக் காய்பிடித்து அறுவடைக்கு வரும் நிலையில் இருந்தன.

அப்போது கவுதாரி, தவிட்டுக் குருவி, அணில் போன்றவை காய்களைத் தோண்டித் தின்னக் காட்டுக்குள் சுற்றும். அப்போது கீரி அங்கே நுழைந்தால் அவையனைத்தும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடும். எங்களுக்கு அது பேருதவியாக இருந்தது.

செண்பகத்தின் வேட்டை

ஒருநாள் காட்டில் முயல் குட்டிக்கும் செண்பகத்திற்கும் (Greater coucal) இடையில் ஓயாத போராட்டம். முயல்குட்டியைப் பிடிக்கச் செண்பகம் முயன்றுகொண்டிருந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in