வண்ணத்துப்பூச்சிகள் செழித்த இந்தியா

வண்ணத்துப்பூச்சி,  வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி,  வண்ணத்துப்பூச்சி

Updated on
2 min read

பொதுவாகப் பகலில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளையே பரவலாகப் பார்க்கிறோம். அதேநேரம் வண்ணத்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த அந்திப்பூச்சி வகைகளும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவை இரவில் இரைதேடும் இரவாடிகள்.

இவை இரண்டுக்கும் (Lepidoptera) சிறு செதில்கள் போன்ற அமைப்பு கொண்ட இறக்கைகள் உண்டு. வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மடித்தோ, பாதி மடித்தோ ஓய்வெடுக்கும். அந்திப்பூச்சி இறக்கைகளை திறந்துவைத்து ஓய்வெடுக்கும்.

இந்தியாவில் மொத்தம் 13,703 வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவாகி உள்ளன. உலக அளவில் அறியப்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களில் இது 8.25% ஆகும். இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் ( Zoological Survey of India – ZSI ) அறிவியலாளர்கள், ‘இந்திய வண்ணத்துப்பூச்சி இன அட்டவணை' (Catalogue of Lepidoptera of India) என்கிற விரிவான ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர். Zootaxa என்கிற ஆய்விதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுப் பணியானது பூச்சியினங்களைப் பட்டியல் இடுதல், கள ஆய்வுகள், அருங்காட்சியக மாதிரிகளுடன் ஒப்பீடு, அறிவியல் நூல்களுடனான சரிபார்ப்பு போன்ற பெரும் சுமைகளை உள்ளடக்கியது. இதற்காக, இந்திய விலங்கியல் ஆய்வக அறிவியலாளர்கள் நவ்நீத் சிங், ராகுல் ஜோஷி ஆகிய இருவரும் சுமார் 12 ஆண்டுகள் உழைத்திருக்கின்றனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in