விலாங்கு மீனின் மின் வேட்டை | இயற்கையில் அறிவியல் 16

விலாங்கு மீனின் மின் வேட்டை | இயற்கையில் அறிவியல் 16
Updated on
2 min read

புலி வேட்டை, சிங்க வேட்டை கேள்விப்பட்டிருப்பீர்கள். மின் வேட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கடலில் வாழும் ஒரு வித விலாங்கு மீன் (Electric eel) மின்சாரத்தைப் பாய்ச்சி தனது இரையைப் பிடிக்கிறது. உண்மையில் அது உருவாக்கும் மின்னழுத்தம் (வோல்டேஜ்) கிட்டத்தட்ட 700 வோல்ட்டுக்கு மேல்.

இவ்வளவு அதிக மின்னழுத்தத்தை இரை மீது செலுத்தினால் ஒன்று அது செயலிழந்து விடும் அல்லது மரணித்துவிடும். ஒரு பரிசோதனைக்கூடத்தில்கூட இவ்வளவு அதிக நேர் மின்னழுத்தத்தை (DC Voltage) உருவாக்குவது கடினம். ஆனால், பரிணாம வளர்ச்சி இந்த மீனுக்கு இப்படி ஒரு வசதியைத் தந்திருக்கிறது.

ஓம் விதியும் கிர்காப் விதிகளும்: பள்ளியில் ஓம் விதி, கிர்காப் விதிகளைப் பற்றிப் படித்திருப்போம். ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டம்- மின்தடை-மின்னழுத்தம் ஆகிய மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை ஓம் விதி விவரிக்கிறது.

நிறைய மின்கலங்கள், மின்தடைகள் உள்ள மின்சுற்றில் உள்ள மின்சாரத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை கிர்காப் விதிகள் விவரிக்கின்றன. எலக்ட்ரிக் ஈல் மீன்கள் எவ்வாறு இவ்வளவு அதிக மின்னழுத்தத்தை உருவாக்குகின்றன என்கிற புரிதலுக்கு இந்த இரண்டு விதிகளும் உதவுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in