

தேனீ மிகச் சிறிய உயிரினமாக இருந்தாலும், அதன் அறிவுத்திறன் அறிவியலாளர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. தேனீயின் மூளை ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக, அதாவது கடுகில் பாதி அளவுக்கும் குறைவான அளவிலேயே இருக்கிறது.
இந்த மூளையில் 10 லட்சத்துக்கும் குறைவான நரம்பு செல்கள் மட்டுமே உள்ளன. இருந்தாலும் அது நுட்பமான சிந்தனைத் திறனைக் கொண்டிருக்கிறது.