

இந்தியாவில் இன்னும் 70 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றனர். அவர்களில் 60 சதவீதம் பேர் விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், இன்றைய நிலையில் விவசாயம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தொழிலாக இல்லை. துன்பங்கள் பல இருந்தபோதிலும், நமது விவசாயிகள், அந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு, தொடர்ந்து சாகுபடி செய்கின்றனர்.
மக்கள் தினமும் உணவு உண்ண வேண்டும். அதனால், தமக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொண்டு, இந்த நாட்டு மக்களுக்கான உணவை நம் விவசாயிகள் தொடர்ந்து உற்பத்தி செய்து தந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்த மேன்மைமிக்க விவசாயம் இன்று, அதீத ரசாயன உரங்களின் பயன்பாடு, பூச்சிக்கொல்லிகளால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.