உயிர் மூச்சு
இயற்கைப் பொறியாளர்கள் | இயற்கையில் அறிவியல் 04
மரங்களை என்றைக்காவது கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? அடிமரம் தடிமனாகவும் (விட்டம் அதிகமாகவும்), உயரே செல்லச் செல்லத் தடிமன் குறைந்துகொண்டே செல்லும். ஏன் அடிமரம் முதல் உச்சிவரை ஒரே தடிமனில் மரங்கள் இல்லை? தங்களைத் தகவமைத்துக்கொள்ள மரங்கள் உருவாக்கிக்கொண்ட பொறியியல் நுண்ணறிவு நம்மை வியக்க வைக்கும்.
வளையவா? முறியவா? - மரத்தின் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி மிக முக்கியம். ஒரு மரம் எந்த அளவுக்கு உயரமாக வளர்கிறதோ, அந்த அளவுக்கு அதற்கு சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும். அதற்காக மரங்கள் அதிக உயரத்துக்கு வளர முற்படும். ஆனால், அதிக உயரத்துக்கு வளர வளர அதன் அடிமரம் அதிக எடையைத் தாங்கியாக வேண்டும்.
