

மண்புழுவைப் போலவே கரையானும் உழவர்களின் நண்பனே. நிலத்தின் ஆழத்தில் இருக்கும் தங்கள் தாய்க்குத் தேவையான உணவை எடுத்துச் செல் வதற்காக கரையான்கள் தரைப் பகுதிக்கு வருகின்றன. தரையின் மேல் பகுதியில் கிடைக்கும் மட்கிய இலை, தழைகள், மரப் பட்டைகள் போன்றவற்றை சுரண்டி, தரைக்குக் கீழே கொண்டு செல்கின்றன.
அவ்வாறு கீழேயிருந்து மேலே வந்து செல்லும்போது கரையான்கள் உருவாக்கும் பாதைகள், மண்ணுக்கு நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தித் தருகின்றன. மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரை, நிலத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு செல்ல, கரையான்கள் ஏற்படுத்திய பாதை மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.