

கட்டுப்பாடற்ற முறையில் ரசாயன உரங்களை அதீதமாகப் பயன்படுத்திய நிலங்களில் மிகக் கடுமையான நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மண்ணின் உயிர்த்தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நிலங்களில் எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும், போதிய விளைச்சல் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் இப்போது விளையும் அளவு கூட மகசூல் இருக்காது.
இயற்கைக்கு மிகவும் விரோதமாக ரசாயன உரங்களையும், நஞ்சு மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தியதன் விளைவை நமது தலைமுறையிலேயேப் பார்க்கத் தொடங்கி விட்டோம். செயல் இழந்த மண்ணை எதுவும் செய்ய முடியாமல், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு இருக்கிறது.