இளம் தொழில்முனைவோர் பயிற்சி

இளம் தொழில்முனைவோர் பயிற்சி
Updated on: 
1 min read

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உள்ள தொழில்முனைவுத் திறனை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொழில்முனைவுத் துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் ‘ஆனந்தி ஃபெல்லோஷிப்’ திட்டத்தை பாம்பே ஷேவிங் தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதியுதவி விவரம்: படிப்பு நிதியுதவிக்கான முதற்கட்டத் தேர்வில் முதல் 50 இடங்களைப் பெறும் மாணவர்கள் ‘Grit Bootcamp’ பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள். குர்கானில் மூன்று நாள்கள் நேரடியாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்படும் 10 மாணவர்களுக்குப் படிப்பு நிதியுதவி வழங்கப்படும்.

படிப்பு நிதியுதவிக்குத் தேர்வான மாணவர்களுக்குக் கல்லூரிப் படிப்பின்போது ‘Pit-Stop Internship’ வாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சியுடன் மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, பாம்பே ஷேவிங் நிறுவனத்தில் தொழில்முனைவோர் பயிற்சியும் ஊதியமும் வழங்கப்படும்.

மேலும், படிப்பு நிதியுதவி முடிந்த பிறகு சொந்தமாக நிறுவனம் தொடங்க விருப்பமுள்ள மாணவர்களில் திறமையானவர்களுக்கு ரூ.1 கோடிவரை அடிப்படை முதலீட்டு நிதி (Seed Funding) கிடைக்கலாம்.

தகுதி: 11 அல்லது 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் அல்லது இளங்கலைப் படிப்பில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரருக்கு ஏற்கெனவே தொழில்முனைவு அனுபவம் எதுவும் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ‘ஆனந்தி ஃபெல்லோஷிப்’பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதற்கட்டத் தேர்வு சென்னை உள்பட இந்தியாவின் 17 நகரங்களில் நடைபெறும். இது நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுக் கட்டணம்: ரூ.199

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 15, 2026

மேலும் விவரங்களுக்கு: theanandifellowship.com

இளம் தொழில்முனைவோர் பயிற்சி
40 வயசுக்குள்ள ‘ரிட்டையர்’ ஆகணுமா? | தீயா வேலை செய்யணும் ப்ரோ 1

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in