கட்டணமில்லாமல் சந்தை முதலீட்டுப் படிப்பு | வெற்றி உங்கள் கையில்

கட்டணமில்லாமல் சந்தை முதலீட்டுப் படிப்பு | வெற்றி உங்கள் கையில்
Updated on
2 min read

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர். நான் பி.ஏ. படித்துள்ளேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். பங்குச்சந்தை முதலீடுகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதில் டிரேடிங் செய்வதற்கு முன் அதைப் பற்றி முழுமையாகப் படிக்க விரும்புகிறேன். என்ன படிக்க வேண்டும்? - கோதை நாயகி, காஞ்சிபுரம்.

உங்களின் எண்ணத்தை வரவேற்கிறேன். பங்குச்சந்தைகள், முதலீடுகள் குறித்து அடிப்படையான விஷயங்களை அறிந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது. இல்லையென்றால் பெரும் நஷ்டத்தில் தள்ளிவிடும். இதற்கெனத் தனியார் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன.

என்கிறபோதும் உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் சந்தை முதலீடுகள், நிதி மேலாண்மை குறித்து ஏராளமான குறுகிய காலப் பயிற்சிகளையும் படிப்புகளையும் யூடியூப் உரைகளையும் வழங்குகின்றன. இவற்றில் கட்டணம் செலுத்திப் படிக்கக்கூடிய படிப்புகளும் கட்டணமில்லாப் படிப்புகளும் அடங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில படிப்புகள்:

என்.எஸ்.இ. எனப்படும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், சில சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. என்.எஸ்.இ. சர்டிஃபைடு மார்க்கெட் புரொஃபெஷனல் ஃபார் ஜெனரல் ஃபினான்ஸ், புரொஃபெஷனல் சர்டிஃபிகேட் இன் ஃபினான்ஷியல் மார்கெட்ஸ், சர்டிஃபிகேட் இன் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் போன்ற படிப்புகளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டும்.

கட்டணமில்லாப் படிப்புகளாக ஸ்டாக் மார்க்கெட் பேசிக்ஸ், அட்வான்ஸ்டு லெவல் ஃபண்டமென்டல்ஸ் ஆஃப் ஷேர் மார்க்கெட்ஸ் போன்றவற்றைப் படிக்கலாம்.

இவை மட்டுமன்றி இணையவழிக் கற்றல் தளமான கோர்செராவில் யேல் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ் (படிப்புக் காலம்: 1-3 மாதங்கள்), பிராக்டிகல் கைடு டு டிரேடிங் (3 – 6 மாதங்கள்) படிப்புகளைப் படிக்கலாம்.

ஜெனீவா பல்கலைக்கழகம் வழங்கும் அண்டர்ஸ்டாண்டிங் ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ், மிஷிகன் பல்கலைக்கழகம் வழங்கும் ஸ்டாக்ஸ் அண்டு பாண்ட்ஸ் (4 வாரங்கள்), ரைஸ் பல்கலைக்கழகம் (Rice University) வழங்கும் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் (3 - 6 மாதங்கள்) போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.

டிரேடிங் பேசிக்ஸ் (4 வாரங்கள்), டிரேடிங் ஸ்டிராடர்ஜிஸ் இன் மெர்ஜிங் மார்க்கெட்ஸ், பிசினஸ் கைடு (1 – 4 வாரங்கள்) போன்ற படிப்புகளை இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வழங்குகிறது. ஐஐஎம் பெங்களூரு, கட்டணமில்லா அறிமுகப் படிப்பை வழங்குகிறது.

ஆனால், சான்றிதழ் பெற மட்டும் ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். ஸ்கில் இந்தியா தளமும் ஸ்டாக் மார்க்கெட் ஃபவுண்டேஷன் கோர்ஸை வழங்குகிறது. இதை BFSI செக்டார் ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் www.skillindiadigital.gov.in என்கிற இணையதளத்தில் பார்க்கலாம்.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், கேப்பிடல் மார்க்கெட் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஃபார் பிகினர்ஸ், இன்ட்ரொடக்‌ஷன் டு ஃபினான்ஸ் - பேங்கிங், இன்ட்ரொடக்‌ஷன் டு ஸ்பெஷல் சிச்சுவேசன் இன்வெஸ்டிங் போன்ற படிப்புகளை இணையவழியில் வழங்குகிறது.

இப்படிப்புகள் இத்துறையில் ஆழ்ந்த அறிவைப் பெற வழிவகுக்கும். மேற்கூறிய தளங்களையும் படிப்புகளையும் சற்றே ஆழ்ந்து நோக்குங்கள். உங்களுக்குப் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுங்கள். உரிய அறிவைப் பெற்று சந்தை முதலீடு செய்து வெற்றி பெறுங்கள்.

கட்டணமில்லாமல் சந்தை முதலீட்டுப் படிப்பு | வெற்றி உங்கள் கையில்
முதுமையைப் படித்தால் இளமையில் வேலை! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 24

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in