கல்வியை பாதிக்கும் ‘பாரா சோஷியல்’

கல்வியை பாதிக்கும் ‘பாரா சோஷியல்’
Updated on
1 min read

இன்றைய காலக்கட்டத்தில் திறன்பேசி வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக மட்டும் இல்லை. கல்வி கற்கவும், பொழுதுபோக்கவும், உலகத்துடன் இணையவும் பயன்படும் கருவியாக மாறி யுள்ளது. இதனால் சமூக வலைத் தளங்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் நம் அன்றாட நிகழ்வுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

வரலாறு: உலகின் முதல் சமூக வலைதளமான 'சிக்ஸ் டிகிரிஸ்' (Six Degrees) 1997இல் அறிமுகமானது. இன்றைய ஃபேஸ்புக்கைப் போலவே பயனர்கள் தங்களுக்கான கணக்கை உருவாக்கி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுடன் உரையாடி நட்பு கொள்ள முடிந்தது.

இதுவே சமூக வலைத்தளங்களின் முன்னோடி. பின்னர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்ட கிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளன.

‘பாரா சோஷியல்’ - 2025இல் சமூக வலைத்தளங்களால் ஏற்படும் ‘பாரா சோஷியல்’ (Para social) உறவு முறை உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது தனிநபர் ஒருவர் சினிமா, விளையாட்டு, அரசியல் அல்லது பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரபலங்களுடன் ஒருதலைப்பட்சமான உறவை மனதில் உருவாக்கிக்கொள்வதைக் குறிக்கிறது.

இதில் ரசிகர்கள் அந்தப் பிரபலத்தை தனிப்பட்ட முறையில் தங்களுக்கு நெருக்கமானவர் என நம்புவதாகவும், அதனால் சில பாதிப்புகளைச் சந்திப்ப தாகவும் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

உதாரணத்துக்கு, 15 வயது பள்ளி மாணவி ஒருவர் அவருக்குப் பிடித்த யூடியூப் பிரபலத்தைப் பின்தொடர்கிறார் என வைத்துகொள்வோம். அவர் ஒரு பிரபலம் என்பதைத் தாண்டி, அன்றாட வாழ்வில் அந்த யூடியூப் பிரபலத்தை நெருங்கிய நண்பர்போலக் கருதி, அவரின் கருத்துகள், வாழ்க்கை முறை, முடிவுகளைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்.

இதனால் படிப்பில் கவனச் சிதறல், நேரடி உறவுகளிலிருந்து விலகல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதிலிருந்து தப்பிக்கப் பெற்றோர், ஆசிரியர் உதவியோடு கல்வியை வலுப்படுத்தி, சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்காகச் செலவிடப்படும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பிரபலங்களுக்கும் உண்மையான வாழ்க் கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளத்தில் வெளியாகும் கருத்துகளை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வகுப்பறையில் இது குறித்த விவாதங்களை ஊக்குவித்தால் மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படும். சமூக வலைத் தளங்களை முழுமையாகத் தவிர்க்க முடியாது.

ஆனால், அவற்றை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன் படுத்துவது என்பதை கற்றுக்கொள்வது அவசியம். பாரா சோஷியல் உறவுகளின் தன்மையை புரிந்துகொண்டு, யதார்த்தத் திற்கும் மெய்நிகர் உலகிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயல்பட வேண்டும்.

- கொ.தீனேஷ்வர் (பயிற்சி இதழாளர்)

கல்வியை பாதிக்கும் ‘பாரா சோஷியல்’
உலகை ஆளப்போகும் முக்கியப் படிப்பு வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in