போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லாப் பயிற்சி | வெற்றி உங்கள் கையில்

போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லாப் பயிற்சி | வெற்றி உங்கள் கையில்
Updated on
2 min read

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் நான் எம்.ஏ. எகனாமிக்ஸ் படித்துவிட்டு, அரசு வேலைக்காகத் தயாராகி வருகிறேன். போட்டித் தேர்வுக்குத் தயாராக, தனியார் பயிற்சி மையங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. பொருளாதார வசதி குறைவாக உள்ள எனக்கு, கட்டணமில்லாமல் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கவும். – திலகவதி, விருத்தாசலம்.

இன்று பெரிய, சிறிய நகரங்களில் தனியார் பயிற்சி மையங்கள் இளைஞர்களைப் போட்டித் தேர்வு களுக்குத் தயார்படுத்த அதிகளவில் செயல்படுகின்றன. இங்கு தேர்வுக்கு ஏற்பப் பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதேநேரம், எவ்விதக் கட்டணமும் இன்றி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளன. இதன் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களைத் தயார்படுத்துகின்றன.

முதலில் மத்திய அரசின் திட்டத்தைப் பார்க்கலாம். தற்போது ‘SATHEE’ எனும் திட்டம் நடைமுறையில் உள்ளது. (SATHEE – Self Assessment Test And Help for Entrance Exams). இத்தளத்தை பல்கலைக்கழக மானியக்குழு வும் (யுஜிசி) ஐஐடி கான்பூரும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இதன் வழி மத்திய அரசு நாட்டின் மிக முக்கியத் தேர்வுகளான நீட், ஜெஇஇ, யுபிஎஸ்சி, GATE, CAT போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களைத்

தயார்படுத்த ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் ஆகியோர் பாடத்திட்டங்களைக் காணொளி வடிவில் உள்ளீடு செய்துள்ளனர்.

பயிற்சித் திட்டங்கள், பாடங்கள், பயிற்சித் தேர்வுகள் ஆகியவையும் இங்கு உள்ளீடு செய்யப் பட்டுள்ளன. இப்பயிற்சிப் பாடங்களைத் தயாரித்தவர்கள் நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎஸ்சியைச் சேர்ந்த பேராசிரியர்கள். எனவே, இதன் தரம் குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை.

முன்னர் தெரிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகள் மட்டுமன்றி கிளாட் (CLAT), ஐசிஏஆர்ஆர் (ICARR), சியூஇடி (CUET), எஸ்எஸ்சி (SSC) போன்ற தேர்வுகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://sathee.iit.ac.in/ அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகலாம்.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் இணையவழியாக வழங்கப் படுகின்றன. ஆங்கிலம், இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட 12 பிராந்திய மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு 1 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயிற்சி வழங்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதிலும் சேரலாம்.

மேலும், மத்திய அரசின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்குக் கட்டணமில்லா இணையவழிப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, போட்டித் தேர்வுகளுக்கான அனைத்துப் பாடப்புத்தகங்களையும் மையங்களில் அமர்ந்து கட்டணமின்றிப் படித்து மாணவர்கள் பயன்பெறலாம். இவற்றைத் தவிர, மாவட்ட அறிவுசார் மையங்களிலும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், மாணவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் வேலை தேடுபவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துகிறது. மேலும், யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த, அண்ணா மேலாண்மை நிறுவனம் தகுதித் தேர்வு நடத்தி, கட்டணமில்லாப் பயிற்சிகளை வழங்குகிறது.

போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லாப் பயிற்சி | வெற்றி உங்கள் கையில்
சர்க்கரை விலையேற்றம் கட்டுக்குள் வருமா? | சொல்... பொருள்... தெளிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in