மாற்றுத்திறனாளி கல்வி உதவித்தொகை

மாற்றுத்திறனாளி கல்வி உதவித்தொகை
Updated on
1 min read

பொறியியல் படிப்புகளைப் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE), ‘சக்‌ஷம் கல்வி உதவித்தொகை'யை (Saksham Scholarship) வழங்குகிறது.

2026–27 கல்வியாண்டுக்கான உதவித்தொகைக் கான விண்ணப்பங்ள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகை விவரம்:

இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்விக் கட்டணம், புத்தகங்கள் உள்ளிட்ட கல்விச் செலவுகளுக்கு இந்தத் தொகையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனைக் (Benchmark Disability) கொண்டிருக்க வேண்டும். 2026–27 கல்வியாண்டில் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் இணைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal) மூலம் இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளர் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், படிப்பு சேர்க்கைச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைப் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.

கடைசி நாள்:

விண்ணப்பங்களை அக்டோபர் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அல்லது தேசிய கல்வி உதவித்தொகையின் அதிகாரபூர்வ இணையதளங்களை அணுகலாம்.

மாற்றுத்திறனாளி கல்வி உதவித்தொகை
டீ படிப்பு தெரியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in