

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர். நான் பதினோராம் வகுப்புப் படிக்கிறேன். எனக்குப் பொறியியல் / மருத்துவம் படிக்க விருப்பமில்லை. ஆனால், ஆர்கிடெக்சர், டிசைனிங் அல்லது இதழியல் படிக்க விரும்புகிறேன். நான் ஒரு ‘கிரியேட்டிவ் பெர்சன்’. அதனால் இதில் ஏதாவதொரு படிப்பைப் படிக்கலாமா அல்லது வானிலையியல் படிக்கலாமா எனத் தெளிவுபடுத்துங்கள். - நகுலா கார்த்திகேயன், மதுரை
நீங்கள் படைப்பூக்கத் திறன் பெற்றவர் (கிரியேட்டிவ் பெர்சன்) எனக் கூறுவதால் உங்களுக்கு ஆர்கிடெக்சர், டிசைனிங் அல்லது இதழியல் பொருத்தமாக இருக்கலாம். இப்படிப்புகள் குறித்துச் சில தகவல்கள்: ஆர்கிடெக்சர் படிப்பில் சேரப் பின்வரும் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். NATA (நேஷனல் ஆப்டி டியூட் டெஸ்ட் ஃபார் ஆர்கி டெக்சர்) தேர்வை கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர் (COA) நடத்துகிறது.
‘JEE Arch’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் பி.ஆர்க்., பி.பிளான்., படிப்புகளை ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டிகள், எஸ்.பி.ஏ. (ஸ்கூல் ஆஃப் பிளானிங் - ஆர்கிடெக்சர்) போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். பி.பிளானிங் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் (புது டெல்லி), சி.இ.பி.டி. பல்கலைக்கழகம் (அகமதாபாத்), ஐ.ஐ.டி. கரக்பூர், அன்சால் பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.