உலகச் சந்தையில் ஏற்றுமதியாளராக வேண்டுமா? | வெற்றி உங்கள் கையில்

உலகச் சந்தையில் ஏற்றுமதியாளராக வேண்டுமா? | வெற்றி உங்கள் கையில்
Updated on
1 min read

என் அப்பா அம்மா இருவரும் டெய்லர். சிறிய கடை மூலம் சுமாரான வருமானம் கிடைக்கிறது. நான் டிகிரி படித்து வருகிறேன். எனக்கு ரெடிமேட் டிரஸ் தைத்து ஏற்றுமதியாளராக வேண்டுமென்பது கனவு. வழிகாட்டுங்கள். - சுகவனேஸ்வரன். அவிநாசி.

படிக்கும்போதே ஏற்றுமதியாளராக வேண்டுமென்கிற உங்களது கனவை வரவேற்கிறேன். முதலில் நீங்கள் 'FIEO’ எனப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்தும் குறுகிய காலப் பயிற்சியில் சேர வேண்டும். இது ஐந்து நாள் இணையவழிப் பயிற்சி. இப்பயிற்சி வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, fieo.org இணையதளத்தைப் பார்க்கலாம்.

இப்பயிற்சியில் ‘IEC’ (Importer Exporter Code) சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை விதிகள், தயாரிப்பு களை வாங்கும் இறக்குமதியாளர் கள், ஏற்றுமதி - இறக்குமதியாளர்கள் சந்திப்பு, வங்கிக் கணக்கு தொடங்கு வது எப்படி என்பது போன்று துறை சார்ந்த முக்கியத் தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி முழுக்க முழுக்கத் தமிழிலேயே வழங்கப்படுகிறது.

தெரிந்துகொள்ள வேண்டியவை: இத்துறை சார்ந்து இதர தகவல் களைப் பெற ‘DGFT’ எனப்படும் இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் இணைய சேவையைப் (dgft.gov.in) பார்வை யிடுங்கள். இதில் ஏற்றுமதி குறித்த முக்கியச் சேவைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ‘எலக்ட்ரானிக் சர்டிஃபிகேட் ஆஃப் ஆரிஜின்’ வழங்கப்படும். ஏற்றுமதிக் கான உலகளாவிய வாய்ப்புகள் குறித்தும் எந்த நாட்டில் என்னென்ன தேவைகள் என்பது பற்றிய தகவல் களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்திய ஏற்றுமதியாளர்கள், ‘குளோபல் இ-காமெர்ஸ் கைடு’ மூலம் உலகளவிலான முதன்மை இறக்குமதியாளர் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். நாட்டின் பொருளாதார வர்த்தகப் புள்ளிவிவரங்கள், சந்தை நிலவரம், இந்தியப் பொருள்களுக் கான சாதகமான சந்தைகள் குறித்து நாடுகள்வாரியாக விவரங்களை அறிந்துகொள்ளலாம். சர்வதேசச் சந்தை நிலவரம் குறித்து உயர் அரசு அலுவலர்கள், வல்லுநர்களின் நேரடி முகாம்கள் அவ்வப்போது நடத்தப் படுகின்றன.

‘UDYAM’ பதிவு: குறு, சிறு, நடுத்தர நிறுவனங் களுக்கான எம்.எஸ்.எம்.இ. இணையத் தளத்தில் ஆதார் அட்டை மூலம் பதிவு செய்து அரசு அளிக்கும் முக்கியச் சலுகைகள் குறித்த விவரங்களை அறியலாம். மானியம், அடமானம் ஏதும் வைக்கத் தேவையில்லாத கடன்கள், ஏற்றுமதியாளராக அரசுக்கு அளிக்க வேண்டிய அறிக்கைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

பதிவுசெய்ய: udyamregistration.gov.in தளத்தைப் பார்க்கவும். எனவே ஓர் ஏற்றுமதியாளராக உலகச் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் முன்பு, மேலே கூறிய ‘FIEO’இன் பயிற்சி, ‘IEC’ சான்றிதழ், ‘DGFT' சேவைகள் குறித்து அறிந்துகொள்ளுதல், ‘UDYAM' இணையத்தளத்தில் பதிவுசெய்து மானியம், அடமானம் ஏதும் வைக்கத் தேவையில்லாத கடன்கள், இதர விவரங்களை அறிந்து கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

உலகச் சந்தையில் ஏற்றுமதியாளராக வேண்டுமா? | வெற்றி உங்கள் கையில்
நாட்டிலுள்ள முதன்மை ஆராய்ச்சி நிலையங்களில் படிக்க... | வெற்றி உங்கள் கையில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in